யாழில் 144 பேர் கைது

arrest_1யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் கடந்த வாரத்தில் மட்டும் பல்வேறு குற்றங்களைப் புரிந்த 144 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொஹமட் ஜெஃப்ரி தெரிவித்துள்ளார். இன்று யாழ். பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களினால்; பிடியானை பிறப்பிக்கப்பட்ட 17 பேரும், சட்டவிரோத மது விற்பனை செய்த 10 பேரும், அடித்து காயப்படுத்திய குற்றத்திற்க்காக 30 பேரும், வாகன விபத்து, சூழல் மாசடைதல், சந்தேகம் ஆகியவற்றுக்காக தலா 02 பேர் வீதமும், திருட்டு, குடிபோதையில் தவறாக நடந்தமை, பொது இடத்தில் மது அருந்தியமை, பாதுகாப்பு, கொலைச் சந்தேகம் ஆகியவற்றுக்கு தலா ஒருவர் வீதமும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டவர்கள், குடிபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் என தலா 02 பேர் வீதமும், சட்டவிரோத மது உற்ப்பத்தி செய்த ஒருவர், ஏனைய குற்றங்களிற்காக 53 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts