யாழில் 13 மாடி இருதய சிகிச்சைப் பிரிவு!! சீனாவுடன் ஒப்பந்தம்!

யாழ்ப்பாணத்தில் 13 மாடி இருதய சத்திர சிகிச்சைப் பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கு சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நிலையின் கட்டளை 23 இன் கீழ் 2 இல் எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் 13 மாடி இருதய சிகிச்சைப்பிரிவு கட்டடத் தொகுதியை அமைப்பதற்கு சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். குறித்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு நிதி சார்ந்த அனைத்து வேலைத்திட்டங்களும் நிறைவடைந்துவிட்டன.

இருப்பினும், கட்டட நிர்மாணப் பணிகளுக்கான ஒழுங்குமுறைப் பிரகாரம் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.

யாழ்ப்பாணத்துக்கு பயணம் செய்திருந்தபோது இது குறித்து ஆராய்ந்திருந்தேன்.

மேலும், குறித்த இருதய சத்திர சிகிச்சையில் பணியாற்றுவதற்கு 4 பேருக்கு கொழும்பிலுள்ள தேசிய வைத்தியசாலையில் பயிற்சி அளித்து வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.

Related Posts