யாழில் 13 படைமுகாம்களுக்கு மூடுவிழா! காணிகளும் மீளளிக்க ஏற்பாடு!:யாழ். கட்டளைத் தளபதி

mahinda_hathurusingheயாழ். மாவட்டத்தில் உள்ள 13 இராணுவ முகாம்கள் இந்த வாரம் மூடப்படவுள்ளதாக யாழ். கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் வெளியேறிய முகாம் அமைந்திருந்த காணிகளின் உறுதிப்பத்திரங்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மாதங்களில் காணி அமைச்சு உரிய காணி உரிமையாளர்ளுக்கு இந்த ஆவணங்களை வழங்கும் பணிகளை ஆரம்பிக்கும் என யாழ். கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.

காணி உரிமையாளர்களை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டிருந்த 16 முகாம்களில், 13 முகாம்களிலிருந்து இராணுவம் வெளியேறியுள்ளதாகக் கட்டளைத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

Related Posts