யாழில் 13 சதவீதத்தினரிடம் கணினிகள் உள்ளன

யாழ்.மாவட்டத்தில் வசிப்பவர்களில் 13.1 சதவீதமானவர்களிடம் சொந்தமாக கணினிகள் உள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் தற்போது 1 இலட்சத்து 90,150 குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 17,722 பேர் வசித்து வருகின்றனர். இவர்களின் தனிநபர்களிடத்தில் 13.1 சதவீதத்தினரிடம் கணினிகள் உள்ளன.

இதேவேளை, கம்பனிகள் உள்ளடங்களாக 13.8 சதவீத இணைய இணைப்புக்கள் உள்ளன. 9.1 சதவீதத்தினர் மின்னஞ்சல் உபயோகிக்கின்றனர். அத்துடன், 18.6 சதவீதத்தினர் கணினி அறிவுள்ளவர்களாக இருக்கின்றனர் என யாழ்.மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் கணினி தொடர்பான அறிவு அதிகரித்து, கணினி பயன்பாடுகள் அதிகரித்துள்ள போதும் யாழ்ப்பாணத்தில் சிறந்த கணினிகளை கொள்வனவு செய்வதில் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். பெருமளவானவர்கள் தரமான மேசைக் கணினி மற்றும் மடிக்கணினி என்பவற்றைக் கொழும்பிலிருந்து கொள்வனவு செய்கின்றனர். யாழிலுள்ள கணினி விற்பனை நிலையங்கள் தேவைக்கு ஏற்றவகையில் வைத்திருக்காமையே இதற்கு காரணங்களாக அமைகின்றன.

அத்துடன், கணினி தொடர்பான கற்றைநெறிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களில் சான்றிதழ் தர கற்கைநெறிகளை மட்டும் பூரணமாக மேற்கொள்ள முடியும். டிப்ளோமா அல்லது கணினி பட்டம் தொடர்பிலான கற்கைநெறிகளை மேற்கொள்வதற்கு, அதற்கேற்ற விரிவுரையாளர்கள் பற்றாக்குறையாகவுள்ளது. என்.வி.கியூ 5க்கும் மேற்பட்ட தரத்திலான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சான்றிதழ்களைப் பெறுவதற்கு யாழில் உள்ளவர்கள் கொழும்புக்குச் செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.

Related Posts