இந்திய அரசின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கலாசார மையம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.
இது தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. சுமார் 1200 மில்லியன் ரூபா செலவில் ஆறு மாடிகளைக் கொண்டதாக இக் கட்டடம் அமையப் பெறவுள்ளது.
எனவே இக் கலாசார மையத்தை அமைக்கும் முதற்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2011 ஆம் ஆண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்தியா விஜயம் மேற்கொண்டிருந்த போது வடபகுதியின் அபிவிருத்திக்கு உதவுமாறு இந்திய அரசிடம் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இந்திய அரசின் நிதியுதவி ஊடாக இக் கலாசார மையம் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.