யாழில் 12 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஸ்பிரயோகம் – 19 வயது இளைஞன் கைது!

யாழ். பருத்தித்துறையில் 12 வயது பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 19 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை பாடசாலைக்கு காலை சிறுமி சென்ற நிலையில் மாலை சிறுமி வீடு திரும்பவில்லை.

அதனால் பெற்றோர் சிறுமியை தேடி அலைந்த நிலையில் அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் , சிறுமியின் வீடு அமைந்துள்ள பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் வீட்டுக்கு சென்ற பெற்றோர் அங்கு அறை ஒன்றில் இருந்து கையில் காயங்களுடன் தமது மகளை மீட்டு உள்ளனர்.

அதனை அடுத்து மீட்கப்பட்ட தமது மகளை சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சிறுமி கடத்தி வைக்கப்பட்டு இருந்த வீட்டில் இருந்த இளைஞனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது கடந்த 3 மாத காலமாக தான் சிறுமியை காதலித்து வந்ததாகவும், அதனாலையே தனது வீட்டுக்கு அழைத்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார். குறித்த இளைஞனிடம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை மந்திகை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி யாழ்.போதனா வைத்திய சாலை பெண் நோயியல் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts