யாழில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை!

தீபாவளி பருவ காலத்தில் யாழ். சாவகச்சேரி பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபார நோக்குடன் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகளால் உள்ளூர் வியாபாரிகளுக்கு நட்டம் ஏற்படுவதாக சாவகச்சேரி வணிகர் மன்றம் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாதென நகரசபையிடம் வணிகர் கழகம் கோரிக்கை விடுத்தது.

குறித்த கோரிக்கை சாவகச்சேரி நகரசபைக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதையடுத்து நகர் பகுதியில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை எனவும், அவ்வாறு வழங்குவதாயின் நகரிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பாலே வியாபார நடவடிக்கையை முன்னெடுக்க அனுமதி வழங்குவதாகவும் சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Posts