யாழில் வெடிபொருட்கள் மீட்பு

sheel-bomb-minesநாவாந்துறை பகுதியிலுள்ள காணியிலிருந்து வெடிபொருட்கள் சில நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளன.

யாழ். முஸ்லிம் வட்டாரம் ஆஸாத் வீதியிலுள்ள காணியிலிருந்து இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

காணி உரிமையாளரான பொலிஸ் உத்தியோகத்தர் அதில் கைவிடப்பட்டிருந்த பாழடைந்த கிணற்றினை சுத்தம் செய்துள்ளார். அதன்போதே உரப்பையில் இடப்பட்டநிலையில் ந்ஷல் ரக வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக அண்மையிலுள்ள இராணுவ முகாமிற்கு அறிவித்ததை அடுத்து, இராணுவத்தினரால் அந்த வெடிபொருட்கள் இராணுவ பொறியியல் பிரிவிடம் கையளிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

Related Posts