யாழில் விமானப் படையினரிடம் திருட்டு?

பலாலி இராணுவ முகாமில் விமானப் படை அதிகாரியாகக் கடமையாற்றும் ஒருவரிடமிருந்து பணம் நகைகள் இனம் தெரியாத மர்ம கும்பலால் இன்று அதிகாலை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் உரெளு அம்மன் கோயிலுக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விமானப்படை அதிகாரி தனது குடும்பத்தாருடன் சொந்த ஊரான பொலனறுவை செல்வதற்காக யாழ்ப்பாணம் நோக்கி முச்சக்கரவண்டியில் இன்று அதிகாலை பயணத்தின்போது உரெளு அம்மன் ஆலயத்துக்கு அண்மையில் இனம்தெரியாத முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் விமான படையினரிடமிருந்து 3500 ரூபா பணமும் 2 மோதிரமும் ஒரு சங்கிலி ஆகியவற்றை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts