யாழில் விசேட பொலிஸாரால் ஒன்பது பேர் கைது

யாழ்ப்பாணத்தில் எவ்வித அறிவித்தலும் இன்றி 9 பேர் விசேட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வன்னியிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 பேரும், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்து பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர்களின் உறவினர்கள் நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோது, குறிப்பிட்ட கைதுகளுக்கும் தமக்கும் எந்தவகையான தொடர்புகளும் இல்லையெனவும் தம்மால் இதனையிட்டு எதுவும் செய்யமுடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையங்களுக்கு விசாரணைகளுக்கென பொலிஸாரினால் ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts