யாழில் வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் 10 சிறுவர்கள் கைது!

யாழில் வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் 10 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டுத் தாக்குதலில் சிறுவன் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், சிறுவன் மீது தாக்குதலை மேற்கொண்டனர் எனும் குற்றச்சாட்டில் 10 சிறுவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related Posts