யாழில். வாள் வெட்டுக் குழு அட்டகாசம்: பெற்றோல் குண்டுத் தாக்குதல்!!

யாழ்.அரசடி பகுதியில் உள்ள கடை ஒன்றிற்குள் நேற்று(திங்கட்கிழமை) இரவு நுளைந்த இனந் தெரியாத கும்பல் ஒன்று வாள்களால் இருவரை வெட்டியுள்ளதுடன், கடை மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலையும் நடத்தியுள்ளது.

குறித்த தாக்குதலில் கடையில் வேலை செய்யும் இளைஞர் ஒருவரும், கடைக்குப் பொருட்கள் வாங்க வந்த ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமாக எந்தவித முற்பகைகளும் தமக்கு இல்லை என்றும், எதற்கு இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் தமக்கு தெரியாது எனவும் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related Posts