யாழில் சில நாட்கள் கட்டுப்பாட்டில் இருந்த வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரினால் வாள்வெட்டிற்கு இலக்கான சம்பவமொன்று மானிப்பாயில் இடம்பெற்றுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், வாள்வெட்டில் படுகாயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாள்வெட்டிற்கு இலக்கானவர் மானிப்பாய் கூழாவடி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலங்களில் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்கு பெரும் பதற்றம் நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.