யாழில் வாள்வெட்டு: ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த சாரதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கோவில் வீதியைச் சேர்ந்த குணசிங்கம் ரஜீவ்குமார் என்பவரே இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார்.

வாடகைக் கார் சேவையில் ஈடுபடும் காரை மறித்து குறித்த கும்பல் அந்தக் காரின் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், வேம்படி விதியில் நேற்று (புதன்கிழமை) நண்பகல் இடம்பெற்றதுடன், குறித்த வாள்வெட்டுக் கும்பல் அவரது காரின் கமராவையும் அபகரித்துத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

5 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று கார்ச் சாரதியை வெட்டிக் காயப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளதுடன், தனிப்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts