யாழில் வாள்கள், கைக்குண்டுகளுடன் வன்முறை கும்பலை சேர்ந்த இருவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் இரண்டு கைக்குண்டுகள் உள்ளிட்டவற்றுடன் வன்முறை கும்பலை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பகுதியை சேர்ந்த 18 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 02 கைக்குண்டுகள், 04 வாள்கள், 04 பெற்றோல் குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேநபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்களிடமிருந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள மானிப்பாய் பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Posts