யாழில் வயோதிபப் பெண் அடித்துக்கொலை!!! நகைகளும் கொள்ளை!!!

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூவில் உள்ள வீடொன்றில் வசித்த வயோதிபப் பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்கிழமை நண்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) என்ற வயோதிபப் பெண்ணே அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிமையில் இருந்த வேளை, வீட்டு வேலைக்கு வந்த இளைஞனே பெண்ணை பூ சாடியால் அடித்துக்கொலை செய்த பின்னர் , அப்பெண் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts