யாழில்.வங்கிக் கடனை செலுத்த முடியாமல் கிணற்றினுள் ஒழிந்திருந்த பெண்!

வங்கிக் கடனை செலுத்த முடியாத நிலையில் வங்கி ஊழியர்களுக்கு பயந்து நான்கு மணி நேரம் பெண் ஒருவர் கிணற்றுக்குள் ஒழிந்திருந்த சம்பவம் வடமராட்சி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி பகுதியில் குடும்பநிலை காரணமாக நிதி நிறுவனத்திடம் இருந்து கடனை பெற்று வாராந்தம் அதற்குரிய பணத்தைச் செலுத்தி வந்துள்ளார்.

அண்மைக் காலத்தில் அவரால் வாராந்தம் குறித்த பணத்தொகையினைச் செலுத்த முடியாத நிலையில் குறித்த நிதி நிறுவனங்களின் அதிகாரிகள் அவருடைய வீட்டுக்கு வந்துள்ளனர்.

நான்கு மணி நேரமாகியும் அந்த நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டை விட்டுச் செல்லாத காரணத்தினால் அப்பெண் நான்கு மணி நேரமும் கிணற்றுக்குள்ளேயே பதுங்கி இருந்துள்ளார்.

வடக்கின் நிதி நிலைமைகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கு மத்திய வங்கி ஆளுநர் குமாரசுவாமி இந்திரஜித் உள்ளிட்ட அதிகாரிகள் வடக்குக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts