யாழில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

யாழ்ப்பாணத்தில் மேலும் 3பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) 382பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதில் கோப்பாய், ஊர்காவற்துறை மற்றும் இனுவில் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஆகவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதில் கவனம் செலுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts