பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் க. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (06-05-2020) தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
68 பேருக்கான பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையின் ( Teaching Hospital) ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள் வருமாறு
* போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் – 8 பேர்.
* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு – 3 பேர்.
* பலாலி தனிமைப்படுத்தல் நிலையம் – 45 பேர்.
* யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் – 9 பேர்.
* நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – ஒருவர்.
* சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு – ஒருவர்
* ஆதார வைத்தியசாலை பருத்தித்துறை – ஒருவர்.