யாழில் மூவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேற்படி மூவரும் பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்து தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விடத்தல்பளையில் தனிமைப்படுத்தலில் இருக்கின்ற தென்பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 243 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், ஏனையவர்களுக்கு தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts