யாழில் முரல் மீன்தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

யாழ். பண்ணைக் கடலில் நேற்று முன்தினம் இரவு மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் முரல் மீன் தாக்கி உயிரிழந்துள்ளார்.

குருநகர் பகுதியைச் சேர்ந்த மைக்கல் டினோஜன் என்ற 29 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் நேற்று முன்தினம் இரவு மீன் பிடியில் ஈடுபட்டிருந்த வேளை முரல் மீனொன்று இளைஞனின் கழுத்தைத் தாக்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts