யாழில் மும்மொழி கற்கைநெறி ஆரம்பம்

வடமாகாணத்தில் மும்மொழிகளையும் விருத்தி செய்யும் நோக்கில் ‘மும்மொழி கற்கை நெறி’ வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்.கோப்பாய் கல்வியற் கல்லூரியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

3lang

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மும்மொழிக் கற்கை நெறியினை ஆரம்பித்து வைத்தார்.

வடமாகாணத்தில் சிங்கள மொழிக் கற்கைநெறிக்கு 1065 பேரும் ஆங்கில மொழி கற்கை நெறிக்கு 250 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் தமிழ் மொழிக் கற்கைநெறிக்கு 15 பேரும், சிங்களம் மற்றும் ஆங்கிலம் இரண்டையும் கற்பதற்கு 1858 பேருமாக மொத்தம் 3188 இந்த மும்மொழிக் கற்கைநெறிக்கு விண்ணப்பித்துள்ளதாக ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.

இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி, யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதயப்பெரேரா, யாழ். இந்திய துணைத்தூதரக கொன்சியுலர் ஜெனரல் வே.மகாலிங்கம், யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts