யாழில் முத்தான வியர்வை வர்த்தகக் கண்காட்சி

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்கள மாவட்ட அலுவலகத்தினால் நடாத்தப்படும் முத்தான வியர்வை வர்த்தகக் கண்காட்சி நாளை (19) மற்றும் நாளை மறுதினம்(20) யாழ் மானிப்பாய் இந்து கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

வாழ்வின் எழுச்சித் திணைக்கள மாவட்ட பணிப்பாளர் க.மகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் கலந்துகொள்வதுடன் சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில் நந்தனன், கௌரவ விருந்தினராக மானிப்பாய் இந்து கல்லூரியின் அதிபர் மே.இந்திரபாலா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நாளைய தினம் மு.ப 10.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரையும் நாளை மறு நாள் மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை இவ்வர்த்தக கண்காட்சி இடம்பெறும்.

Related Posts