யாழில் முதியவரைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது!

யாழில் முதியவர் ஒருவரைக் கழுத்து நெரித்துப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Arrested man in handcuffs with hands behind back

அண்மையில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய முதியவர் படுக்கையில் உயிரிழந்துள்ளதாக அவருடன் வசித்து வந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதியவரின் இறப்பில் சந்தேகம் காணப்பட்டமையால் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

உடற்கூற்றுப் பரிசோதனையில் முதியவர் கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இளைஞனைக் கைது செய்த பொலிஸார் அவரை நேற்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்திய வேளை இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Related Posts