யாழில் முச்சக்கர வண்டி உரிமையாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணத்தில் இன்று காலை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, ஆரம்பமாகிய பேரணி யாழ் நகரில் முடிவடைந்தது.

அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கர வண்டியினை தமது வாழ்வாதாரமாக கொண்டு செயற்படுபவர்பவர்கள் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ள நிலையில் குறித்த போராட்டமானது முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது

Related Posts