யாழில் முச்சக்கரவண்டிகளை பதிவுசெய்ய ஏற்பாடு

யாழ். மாவட்டத்தில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் அனைத்து முச்சக்கரவண்டிகளும் உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டுமென யாழ். பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் குற்றச்செயல்களின் மத்தியில் முச்சக்கரவண்டிகள் சில இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் குடாநாட்டில் சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளையும் பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கமும் பொலிஸ் திணைக்களமும் இணைந்து முச்சக்கரவண்டிச் சாரதிகள் அனைவருக்கும் விசேட ஆள் அடையாள அட்டைகளை வழங்கவும் தீர்மானித்துள்ளதாகவும் யாழ். பொலிஸ் நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts