யாழில் முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலைய கட்டிட திறப்பு விழா!

யாழ் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலைய கட்டிடம் இன்று (23) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

1

யாழ் பழைய பூங்கா வீதியில் அமைக்கப்பட்டுள் இப் பயிற்சி நிலையத்தின் நிர்மானப்பணிகளுக்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு 68 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் மூலம் இனிவரும் காலங்களில் அரச உத்தியோகத்தர்களுக்கான திறன் அபிவிருத்தி பயிற்சிகள் இந்த பயிற்சி நிலையத்தினூடாக முன்னெடுக்கப்டவுள்ளன.

மேலும் இந்நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts