யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கல்வியங்காடு விளையாட்டு மைத்தானத்தில் வைத்து இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ். கோப்பாய் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள புலவனார் வீதியால் குறித்த இளைஞர் சென்றுள்ளார்.
இதன் போது மோட்டர் சைக்கிளில் வந்த 6 பேர் குறித்த இளைஞர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது, குறித்த தாக்குதலில் படுகாயடைந்த இளைஞர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.