பருத்தித்துறை சாரையடி பகுதியின் உள் வீதிவழியாக மணல் ஏற்றி வந்திருந்த கன்டர்ரக வாகனம் ஒன்றினை மறிப்பதற்காக காவல்துறையினர் ரயரிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும். இதன்போது யாழ். பருத்தித்துறை வீதி வழியே வந்த கயேஸ் வாகனத்துடன் மணல் ஏற்றிவந்த கன்டர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை வைத்திசாலைக்கு சேர்ப்பதற்கு இளைஞர்கள் முயன்ற வேளை மணல் ஏற்றி வந்தவர்கள் கயேஸ் வாகனத்திற்கே காவல்துறையினர் சுட்டதாக தெரிவித்து கைகலப்பில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து, திங்கட்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த மூவரும் முதலில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் இருவர், மேலதிக சிகிச்சைகளுக்காக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கன்டர் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கன்டரில் வந்த மிகுதி பேர் தப்பியோடிதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.