யாழில் மின் கட்டணம் செலுத்தாது முகாமை விட்டுச் சென்ற இராணுவத்தினர்!

யாழில் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மின் கட்டணத்தை செலுத்தாது இராணுவத்தினர் முகாமை விட்டு சென்றுள்ளனர் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் 4 வருட காலமாக இராணுவத்தினர் முகாம் அமைத்து இருந்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த காலப்பகுதிக்கான மின்சாரக் கண்டனத்தை அவர்கள் செலுத்தாமல் இருந்துள்ளனர் எனவும், நிலுவையாக 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்த வேளை அம்முகாமை விட்டு இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை தென்னிந்திய திருச்சபையின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதனால் , அது தொடர்பில், தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் பத்மதயாளன் ஆண்டகையைத் கேட்டபோது, குறித்த தொகையை இராணுவமே செலுத்தவேண்டும் அவர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts