யாழ் சதுரங்க சம்மேளனத்தால் யாழ் மாவட்டத்தில் முதல் முறையாக மின்னல்வேக சதுரங்கப்போட்டி, 20-20 சதுரங்கப்போட்டி என்பன நடாத்தப்படவுள்ளதாக சதுரங்க சம்மேளனத்தின் செயலாளர் கு.ஆதவன் தெரிவித்துள்ளார்.டிசெம்பர் மாதம் 26ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெற உள்ள சதுரங்கப்போட்டியிலே இப்போட்டிகளை நடாத்தத் திட்டமிட்டுள்ளனர்.20-20 சதுரங்கப்போட்டி 9,11,13,15,17 ஆகிய வயதுப்பிரிவுகளில் ஆண், பெண் இருபாலாருக்கும் நடைபெறவுள்ளது.மின்னல்வேக சதுரங்கப்போட்டி திறந்த போட்டியாக நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- Monday
- December 23rd, 2024