யாழ்.குடாநாட்டில் தற்போது தென்னிலங்கையிலிருந்து அப்பிள், அன்னாசி, தோடம்பழம், மங்குஸ்தான், றம்புட்டான் போன்ற பழங்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகின்றபோதும் யாழ்ப்பாண மாம்பழத்திற்கான மவுசு இன்னமும் குறையவில்லை.கறுத்தக் கொழும்பான், விளாட்டு, அம்பலவி ,வெள்ளைக்கொழும்பான், செம்பாட்டான் போன்ற மாம்பழ வகைகள் தற்போது திருநெல்வேலிச் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. இவற்றுள் கறுத்தகொழும்பான், விளாட்டு மற்றும் செம்பாட்டான் மாம்பழங்களே அதிகம் மக்களால் விரும்பி வாங்கப்படுவதாக மாம்பழ வியாபாரி ஒருவர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத் திருவிழா காலத்தில் மாம்பழ விற்பனை இன்னும் சூடுபிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.இதேவேளை, யாழ்ப்பாணச் சந்தையில் கறுத்தக்கொழும்பான், விளாட்டு, அம்பலவி,போன்றன அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய கறுத்தக் கொழும்பான் மாம்பழம் ஒன்று 40 ரூபாவுக்கும், சிறிய பழம் மூன்று 100 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதுடன், விளாட்டு மாம்பழம் ஒன்று 15 ரூபாவுக்கும் விற்கப்படுகிறது.
வன்னிப் பகுதியிலிருந்து ஏராளமான மாம்பழ வியாபாரிகள் யாழ்.சந்தையிலுள்ள பழ வியாபாரிகளுக்கு மாம்பழங்களை விற்பனை செய்கின்றமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.தற்போது மாம்பழ சீசன் மட்டுமல்ல ஜம்புக்காய்,வத்தகைப்பழம்,பலாப்பழம் பப்பாசி போன்றன சந்தைக்கு வரத்தொடங்கிவிட்டன.