யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மீது துப்பாக்கிப் சூடு மேற்கொண்ட 5 பொலிஸாரையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி காயத்திரி சைலவன் உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி வழக்கு விசாரணை யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் நேற்று (22.08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் கஜன் மற்றும் சுலக்சன் என்ற இரு மாணவர்கள் உயிரிழந்தனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு ப்பிரயோகத்தில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 5 பொலிஸார் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கு விசாரணை நேற்றையதினம் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த 5 பொஸாரையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.