யாழ்ப்பாணத்தின் கொக்குவில் புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதிகளில் ஹெரோயின், கஞ்சா, மதுபான விற்பனை மற்றும் விபச்சாரம் போன்ற விடயங்கள் அதிகம் காணப்படுவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதிகளில் பல்கலைக்கழக மாணவர்களைக் குறிவைத்தே விபச்சாரம் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 22ஆம் திகதி ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைதாகி, யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். இதன்போதே கோப்பாய் பொலிஸார் மேற்படி தகவலைத் தெரிவித்தனர்.
கொக்குவில் புகையிரத நிலையம் தொடக்கம் யாழ். பல்கலைகழகத்தின் பின்புறம் வரையான பகுதிகளே இந்த சட்டவிரோத நடவடிக்கைகளின் முக்கிய இடமாக மாறியுள்ளன.
இதுகுறித்து பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.