யாழ். கல்விவலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே சைவசமய அறிவை மேம்படுத்தும் வகையில் சைவநெறிப் போட்டி நடத்தப்படவுள்ளது.
இதற்கமைய பேச்சு, மாலை கட்டுதல், தோரணம் பின்னுதல் மற்றும் பண்ணிசை ஆகிய போட்டிகள் தரம் 6 முதல் க.பொ.த உயர்தர மாணவர்களிடையே, நான்கு பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன.
இப்போட்டிகளுக்கான விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கோப்பாய் கோட்ட மட்டப்போட்டி, எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை யாழ். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியிலும், 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நல்லூர் மற்றும் யாழ்ப்பாணக் கோட்டங்களுக்கான போட்டிகள் யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியிலும் இடம்பெறவுள்ளன.