யாழ். மாவட்டத்தில் மாசுபட்ட குடி நீர் போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
நுகர்வோர் வழிப்புடன் இருக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட இணைப்பாளர் வசந்தசேகரன் அறிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்திற்கு அண்மையில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் போத்தல் குடிநீரை கொள்வனவு செய்யும் போதே பாவனைக்கு உதவாத மாசுபட்ட நீர் விற்பனை செய்யப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட இணைப்பாளர் தெரிவிக்கையில், தண்ணீர் போத்தல்கள் தாவடிப்பகுதியில் இருந்தே கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. குறித்த இடத்திற்கு உடனடி விஜயம் மேற்கொண்ட போது 700 தண்ணிப்போத்தல்கள் வரை கண்டு பிடிக்கப்பட்டன.
பாவனைக்கு உதவாத அளவிற்கு தண்ணீருக்குள் மாசுக்கள் படிந்து காணப்பட்டன. எனினும் இவை தென்பகுதி தயாரிப்பாகவே உள்ளது. எனவே தேவையான விபரங்களை தற்போது பெறுமாறு குறித்த நபர்களுக்கு அறிவித்துள்ளோம்.
தேவையான ஆதரங்களைப் பெற்றவுடன் நீதிமன்றத்தில் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
எனவே குடிநீரைக் கொள்வனவு செய்பவர்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறும், இவ்வாறான நிலையில் விற்பனை நிலையங்களில் பொருட்கள் காணப்பட்டால் உடனடியாக யாழ். மாவட்ட செயலகத்தில் இயங்கி வரும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு அறியத்தருமாறும் அவர் மேலும் அறிவித்துள்ளார். –