யாழ். ஒல்லாந்தர் கோட்டைக்குள் மத்திய கலாசார நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன், புதிய கட்டிடம் அமைப்பதற்கான பெயர்ப்பலகை திரை நீக்கமும் நேற்று இடம்பெற்றது.
மத்திய கலாசார நிலையத்தினை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் திறந்து வைத்தார்.
கல்வி அமைச்சு, தொல்பொருளியல் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிலையம் ஆகியனவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.
பொலன்னறுவை பகுதியில் உள்ள தொல்பொருள் சின்னங்களை இங்கு காட்சிப்படுத்துவற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
36 வருடங்களுக்கு முன்னைய தொல்பொருள் அகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் செய்யப்படாத நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பரிந்துரைக்கு அமைவாக நிரந்தர கட்டிடம் அமைத்து, தொல்பொருள் சின்னங்களை காட்சிப்படுத்தவுள்ளன.
இந்த நிகழ்வில், யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.