யாழில்.மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இரு பெண்களை காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
யாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் மது போதையில் பயணித்த இரு பெண்கள் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
விபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது இரு பெண்களும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இரு பெண்களையும் அவ்விடத்தில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.