யாழில் போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் இளைஞர் கைது!!

போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் (08.05.2023)ஆம் திகதி யாழ்ப்பாணம் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் பெண்கள் தங்கும் இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மின்னியல் அச்சு இயந்திரத்தை வேறு இடத்துக்கு மாற்ற முற்பட்ட வேளையிலே இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பளை பகுதியில் வைத்து கடந்த வாரம் 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்ட நபருக்கும் யாழ்.நகரில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கும் தொடர்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபரை எதிர்வரும் (23.05.2023)ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டு மேலதிக விசாரணைகளை குற்ற விசாரணைப் பிரிவுக்கு மாற்ற அனுமதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts