10 ஆயித்து 100 ரூபா கனேடியன் டொலர் போலி நாணயத்தாள்களை மாற்ற முற்பட்ட இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.நகரில் உள்ள நாணய மாற்று நிலையத்திற்கு இளைஞர் ஒருவர் 10 ஆயிரத்து 100 ரூபா பெறுமதியான கனேடியன் டொலர்களை மாற்றுவதற்கு கொண்டு சென்றுள்ளார்.
அதன் போது அந்த நாணய தாள்களை ஆராய்ந்த கடை உரிமையாளர், அந்த நாணய தாள்கள் அனைத்தும் போலியனவை என அறிந்துக் கொண்டதும், அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சித்தன்கேணிப் பகுதியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர் குறித்த நாணயங்களை மாற்றிக் கொண்டு வருமாறு தந்ததாக தெரிவித்தள்ளனர்.
இதனை அடுத்து குறித்த வர்த்தகரும், இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு மாற்றப்பட்ட கனேடிய டொலரின் இலங்கை பெறுமதி 13 இலட்சம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.