யாழில் போரா முஸ்ஸிம்களின் பள்ளிவாசல் திறந்துவைப்பு

யாழ் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் போரா முஸ்ஸிம் இனத்தவர்களின் பழைமைவாய்ந்த பள்ளிவாசல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

முதற்தடவையாக போரா முஸ்ஸிம் இன உலகத்தலைவர் செரன முகியதீன் சையூதீன் நேற்று யாழ் மாவட்டத்திற்கு விஐயம் செய்தார்.

அவர் இன்று யாழ் ஆஸ்பத்திரி வீதியில் புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட போரா முஸ்ஸிம் பள்ளிவாசலை திறந்து வைத்தார்.

இப்பள்ளிவாசல் 1904 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பழமைவாய்ந்த கட்டிடமாக காணப்பட்ட இந்த பள்ளிவாசல் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு நேற்று போரா முஸ்ஸிம் சமூகத்திடம் கையளிக்கபட்டுள்ளது.

இலங்கை, சவூதிஅரபியா, இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்தும் வருகைதந்து போரா முஸ்ஸிம்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் தழிழர் பண்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு நிகழ்வாக மிருதங்கம், நாதஸ்வரம் போன்ற இசை கருவிகளினாலும் விடேச இசை சங்கமம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கு சிறப்பு துஆ பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன், இவ்வழிபாடுகள் தொடர்ந்து மூன்று நாட்கள் காலை, மாலை இடம்பெறும்.

இதில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ. இளங்கோவன், யாழ் மாவட்ட பொஸிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹட்லர் மற்றும் முஸ்ஸிம் இன சமூகத்தினர் கலந்துகொண்டனர்.

muslim-palli-re-open-1

muslim-palli-re-open-2

Related Posts