யாழில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களுக்கான சின்னங்கள் அறிவிப்பு

vote-box1[1] (1)வடமாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுக்களுக்கான சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இம்முறை வடமாகாண சபைத்தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இருந்து 9 சுயேட்சைக் குழுக்கள்  தேர்தலில் களமிறங்கியுள்ள. அவற்றிற்கான  சின்னங்கள் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரினால் வழங்கப்பட்டுள்ளது.

  1. அன்ரன் ரங்கதுசார தலைமையிலான சுயேட்சைக் குழு – 01 – பந்து சின்னம்.
  2. இராஜலிங்கம் மிதுன்ராஜ் தலைமையிலான சுயேட்சைக் குழு – 02 – இரட்டைக்கொடி
  3. நல்லைநாதன் திருலோக நாதன் தலைமையிலான சுயேட்சைக்குழு – 03 – தபால்பெட்டி
  4. பொன்மதிமுக ராஜா விஜயகாந் தலைமையில் சுயேட்சைக்குழு – 04 – நாகபாம்பு
  5. ஜமீன் மொக மட் முஜையித் தலைமையிலான சுயேட்சைக்குழு – 05 – கூடாரம்
  6. மாணிக்கஜோதி அபிமன்னசிங்கம் தலைமையிலான சுயேட்சைக் குழு – 06 – சுத்தியல்
  7. இராசரத்தினம் ஸ்ரீதா மோதரராஜா தலைமையிலான சுயேட்சைக் குழு – 07 ஆமைப் பூட்டு
  8. கிருஷ்ணசாமி பாஸ்கரன் தலைமையிலான சுயேட்சைக்குழு – 08 – ஜம்புக்காய்
  9. தம்பிப்பிள்ளை இருதயராணி தலைமையிலான சுயேட்சைக் குழு – 09 – புறா

ஆகிய சின்னங்களில் போட்டியிடுவார்கள்  என யாழ்.மாவட்ட உதவி தேர்தல் தெரிவத்தாட்சிப் அலுவலர் தெரிவித்தார்

Related Posts