யாழில் பொலிஸ் மீது தாக்குதல்: இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ஒருவருக்கு தாக்கிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், சிவில் உடையில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு வந்து முச்சக்கரவண்டி வாடகைக்கு கேட்டபோது, அதிகமான காசு சொல்லியிருக்கின்றார்கள்.

இதன்போது, காசு அதிகம் என்ற காரணத்தினால் அவர் முச்சக்கரவண்டி வேண்டாமென கூறிவிட்டுச்சென்ற போது, அவரை கிண்டல் அடித்துள்ளனர்.

அதன்போது, ஏன் கிண்டல் அடிக்கின்றீர்கள் என கேட்டதற்கு, பொலிஸ் உத்தியோகத்தரை அவர்கள் தாக்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில், தாக்குதல் மேற்கொண்ட பிரதான நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts