யாழில் பெண்ணின் சடலம் மீட்பு! கொலை செய்யப்பட்ட பின்னர்தான் கிணற்றில் வீசப்பட்டது!

death_jaffna_lady_001யாழ்.மத்தியூஸ் வீதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஈச்சமோட்டையைச் சேர்ந்த மேரி புஷ்பம் என்னும் வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றில் வீசப்பட்டதாக பிரேதப்பரிசோதனைகள் உறுதிப்படுத்தப்படுவதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மத்தியூஸ் வீதியில் உள்ள குளத்தடியில் அமைந்துள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து வயோதிபப் பெண்ணொருவரின் சடலம் ஒன்று யாழ்.பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இச்சடலம் தற்போது மரண விசாரணைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகளின் பின்னரே பொலிஸார் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இப்பெண் அணிந்திருந்த சில தங்க ஆபரணங்களும் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

Related Posts