யாழில் பெண்களைக் குறிவைக்கும் திருடர்கள்!!

யாழில் ஆலய வழிபாட்டுக்குசெல்லும் பெண்களைக் குறிவைத்து அண்மைக்காலமாக திருடர்கள் தமது கைவரிசைகளைக் காட்டிவருகின்றனர்.

அந்தவகையில் இன்று ஆலய வழிபாட்டுக்குச் சென்ற பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த நபரொருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதோடு அவரிடமிருந்து 10 பவுண் தங்க நகைகள் மற்றும், 7 கையடக்கத் தொலைபேசிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளொன்றையும் கைப்பற்றிய பொலிஸார் குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Related Posts