பெரிய அளவிலான தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான நல்ல சூழலும் அமைவிடமும் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. எனவே வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்தோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து தொழில்முயற்சிகளை மேற்கொள்ளலாம் என யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் இன்று காலை 10 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடினர்.
கலந்துரையாடலின் பின் கருத்து தெரிவித்த யாழ். அரச அதிபர்,
வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்தோர் பெரிய அளவிலான முதலீடுகளுடன் தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான நல்ல சூழல் யாழ்ப்பாணத்தில் நிலவுகின்றது.
எனவே வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்தோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து தொழில்முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் அதற்கான ஒத்துழைப்புகளையும் அமைவிடங்களையும் வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் குறித்த குழுவினரிடம் தான் தெரிவித்தாக யாழ்.அரச அதிபர் தெரிவித்தார்.