யாழில் புதிதாக தோற்றம் பெற்றுள்ள கப்பம் கோரும் கலாசாரம்!

புலம்பெயர் நாடுகளிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருபவர்களிடம் கப்பம் கோரும் நடவடிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண தொிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “புலம்பெயர் நாடுகளிலிருந்து வருபவர்களை அச்சுறுத்தி அவர்களிடமிருந்து பெருந்தொகையான பணம் கப்பமாகக் கோரப்படுகிறது. ஆனால் இது தொடர்பில் முறைபாடுகளை வழங்குவதற்கு பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சுகின்றனர்.

ஆனால் இவ்வாறான பிரச்சினையை தீர்ப்பதற்கு பாதிக்கப்பட்டவர்கள் துணிந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இது குறித்த தகவல்களை வெளியிடுவது அவசியமாகும். கப்பம் கோரும் கலாசாரம் அதிகரித்துச் செல்வது பாரதூரமானதாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts