யாழில் பிரிட்டிஷ் கவுன்ஸில்

இலங்கையில் பிரிட்டிஷ் கவுன்ஸிலின் மூன்றாவது கிளை அடுத்த வருடம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் என அதன் பிராந்திய இணைப்பாளர் ஸ் ரீபன் ரோமன் தெரிவித்தார்.

இந்த கிளையின் மூலம் வட மாகணத்திற்கான சேவையினை மேலும் வலுப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். யுத்த காலத்தில் ஆங்கில கற்கையினை விருத்தி செய்ய முடியாத யாழ். மக்கள் தற்போது விருத்தி செய்ய ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

யாழ். பொது நூலகத்தில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பிரிட்டிஷ் கவுன்ஸிலின் பிரதிப் பணிப்பாளர் போல் கில்டர், இலங்கைக்கான பணிப்பாளர் ரோனி ரேய்லி மற்றும் எழுத்தாளர் ஜயாத்துரை சாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts