யாழில்.பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் சிறப்பு பொலிஸ் செயலணி

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றாக ஒழிக்கும் வகையில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஷான் பெர்னாட்டோவினால் சிறப்பு பொலிஸ் செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த செயலணியின் பணிகள் அனைத்தும் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டிகள் குடாநாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் ஒட்டப்படவுள்ளன.

கடந்த காலங்களில் இடம்பெற்றுவரும் இந்த சட்டவிரோத விற்பனை தொடர்பில், பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பலர் சுட்டிக்காட்டிய நிலையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் பொதுமக்கள் (0766093030) என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை வழங்க முடியும் என்றும், முறைப்பாட்டாளர்கள் தொடர்பில் இரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts