யாழ்.மாவட்டத்தில் பாணின் விலை 10 ரூபாயினால் அதிகரித்து 85 ரூபாய் எனவும் ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்வது இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கங்களுடன் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர் ஆகியோருடன் பாணின் உற்பத்தி மற்றும் விலை தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம்(திங்கட்கிழமை) இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் கோதுமை மாவின் விலை அதிகரித்ததன் காரணத்தால் 450g பாணின் விலை 10 ரூபாயினால் அதிகரித்து 85 ரூபாய் எனவும் ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.